16 வயது மாணவியை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் பொலிஸார் கைது செய்துள்ளனர்!

11ஆவது வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதான மாணவியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி தனியாக வீட்டியில் தங்கியிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் மாணவியை தனது வீட்டுக்கு கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் தாய் பொலிஸாருக்கு புகார் செய்த நிலையில் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பலஹரூவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Add Comment