12 வயது குறைவான இளம் நடிகரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

 

பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா தன்னை விட 12 வயது குறைவான இளம் ஹீரோவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

நடிகை மலைக்கா அரோரா, அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

மலைக்கா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அர்ஜுன் கபூர், மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன். அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்.

அவர்கள் காதலித்து வருவது உண்மைதான். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அர்ஜுனுக்கு வயது 33 ஆகும். தன்னை விட 12 வயது மூத்த நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

Add Comment