105 வீடுகள் வழங்கி வைப்பு பழனி திகாம்பரத்தின் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு

புதிய அரசாங்கத்தின் ஊடாக மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் 105 தனி வீடுகள் இன்று (10) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.

இதன் போது பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டப்பகுதிக்கு 50 தனி வீடுகளும், போகாவத்தை தோட்டபகுதிக்கு 55 தனி வீடுகளும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பசுமை பூமி வேலைதிட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு ஏழு பேச்சர்ஸ் காணியோடு இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கபட்டுள்ளதோடு, அனைத்து தனி வீட்டுத் திட்டத்திற்க்கும் குடிநீர் வசதி, மின்சாரம், மலசலகூட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், எம்.ராம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Add Comment