ஸ்ரீதேவிக்கு வெளிநாட்டில் சிலை!

இந்திய சினிமா ரசிகர்கள் மறக்கமுடியாத நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த வருடம் பிப்ரவரியில் அவரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

தற்போது ஸ்ரீதேவியை போற்றும் வகையில் அவரது சிலையை நிறுவ சுவிற்சர்லாந்து நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

இயக்குனர் யாஷ் சோப்ராவுக்கு ஏற்கனவே Interlaken என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் இயக்கிய பல படங்களில் சுவிற்சர்லாந்தில் படமாக்கப்பட்டன. அதனால் இந்தியர்கள் சுவிற்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வது அதிகரித்தது.

யாஷ் சோப்ராவின் பல படங்களில் ஸ்ரீதேவி தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனால் ஸ்ரீதேவியினை பாராட்ட அவருக்கு விரைவில் சிலை வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Add Comment