வைரலான புகைப்படம்! நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ்.

இவர் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை இயக்குனர் முத்தையா பதிவிட்டு Happy Married Life என்று வாழ்த்தியிருந்தார்.

புகைப்படம் அதிகம் வைரலானதும் சதீஷ் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் வைபவ், மற்றும் சதிஷ் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்தது. இப்படத்தில் நடித்த புதுமுக நடிகை சாக்ஷிதான் இப்புகைப்படத்தில் உள்ளார்.

Add Comment