வைரலாகும் Video!ஒரு வயது குழந்தைக்கு இவ்வளவு தலைமுடியா…

தனது தலைமுடி அழகால் கடந்த 2018-ஆம் ஆண்டு இணைய உலகில் புகழ்பெற்ற குழந்தை பேபி சான்சோ. இக்குழந்தை தற்போது புகழ்பெற்ற சேம்ப்பூ நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளது.

இதன்மூலம் இக்குழந்தை மிக குறைந்த வயதில் தலைமுடிக்கான விளம்பரத்தில் நடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளது.

ஜப்பானை சேர்ந்த 1.3 வயது குழந்தை சான்சோ. கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பிறந்த இக்குழந்தை பிறக்கும் போதே அதிக தலைமுடியுடன் பிறந்தார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

View this post on Instagram

 

もう、無理💂🏼‍♀️ . #スタンプぴったりやん #baby#hair#babygirl #4ヶ月#4months #爆毛

A post shared by 髪記録 / hair diary (@babychanco) on

சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார்பகிர்ந்து வருகின்றனர். இவரது அழகிய புன்னகைக்கும், அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்னம் உள்ளனர். இதன்காரணமாக தற்போது இவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை 357k பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைராக பரவிவந்த நிலையில், ஜப்பானின் பிரபல சேம்ப்பு நிறுவனம் ஒன்று இக்குழந்தையை வைத்து விளம்பர படம் எடுத்துள்ளது.

சான்சோவின் புகைப்படங்களோடு தற்போது இந்த விளம்பரமும் வைரலாகி வருகிறது.

Add Comment