வைரலாகும் புகைப்படம்.! விஜய் சேதுபதியா இது..?

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான எந்த ஒரு படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் இவரது நடிப்பில் “96” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சீதகாதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், புதுமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். பொதுவாக விஜய் சேதுபதி படம் என்றாலே அதில் அவரது தோற்றம் வித்தியாசமாகவும், ரசிகர்களை கவரும்படியும் இருக்கும்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி ஒரு வயதான முதியவர் தோற்றத்தில் கையில் பையுடன் நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.விஜய் சேதுபதி தற்போது “ஆண்டவன் கட்டளை ” படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் “கடைசி விவசாயி” என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய்சேதுபதியின் தோற்றம் தான் இது என்று பலரும் கூறிவந்தனர்.

ஆனால், உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகர் விஜய் சேதுபதி இல்லை என்று தெரியவந்துள்ளது.அந்த புகைப்படத்தில் இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த கவிஞரும் இலக்கிய ஆர்வலருமான க்ருஷி என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு க்ருஷி வந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் விஜய் சேதுபதி என்று புரளியை கிளப்பியுள்ளனர்

Add Comment