வெளியான வீடியோ! நண்பரின் உடலைப் பார்த்து அழுத ரஜினிகாந்த்

கன்னட நடிகரும், தனது நண்பருமான அம்பரீஷின் உடலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கண் கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக அம்பரீஷின் மரணம் குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்திருந்தார். அதில் சிறந்த மனிதர், நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உங்களை மிஸ் பண்ணுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் பெங்களூருக்கு பயணித்த நடிகர் ரஜினிகாந்த், கந்தீரவா ஸ்டேயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பரீஷின் உடலைப் பார்த்ததும் கன்னத்தில் கையை வைத்து துக்கம் தாங்காமல் கண் கலங்கினார்.

பின்னர், அங்கு நின்றுகொண்டிருந்த அம்பரீஷின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Add Comment