வெளியான அதிர்ச்சி ஆடியோ! கெளசல்யாவின் கணவர் சக்தியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய திருநங்கை!

தமிழகத்தில் காதல் கணவனை பறிகொடுத்த கெளசல்யா, சக்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ள நிலையில், அவரைப் பற்றி திருநங்கை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை பறிகொடுத்து நின்ற கெளசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல பணிகளைச் செய்து வருகிறார்.

இதையடுத்து கெளசல்யா சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

இதற்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களும், ஒரு சிலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் திருமணம் செய்து கொண்ட சக்தியைப் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின். அதில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.

இதையடுத்து சக்தியால் பாதிக்கப்பட்ட திருநங்கை ஒருவர் கெளசல்யாவிடம் போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆடியோவால் கெளசல்யாவின் புகழ் நாளுக்கு நாள் களங்கமாகி வருகிறது.

Add Comment