வெற்றியை கொண்டாடிய அனுஷ்கா சர்மா!

கோலியுடன் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலிய வெற்றியைக் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய அணியில் சேர்ந்த சிறிய காலத்திலேயே விராட் கோலி சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பேட்டிங்கை பார்த்த அனைவரும், இவர் கண்டிப்பாக சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று சொன்னார்கள். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியா மட்டும் அல்ல எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக மாறினார் கோலி. 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு இவரது பேட்டிங் ஒரு முக்கியக் காரணம்.

அடுத்தடுத்த அதிரடி, அடுத்தடுத்த வெற்றிகள், களத்தில் ஆக்ரோஷம் என மைதானத்தில், கோலி ஒரு முகம் என்றால் அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் கோலி இன்னொரு முகம். காதல், குறும்பு என அனுஷ்கா சர்மாவுடன் அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ரகம். கோலிக்கு போட்டியாக தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அனுஷ்கா சர்மாவும் போட்டிப் போட்டு வருகிறார். விராட் கோலி பங்கேற்கும் போட்டிகளில் கலந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்துவது, வெற்றி தோல்விகளை களத்திலேயே பகிர்ந்து கொள்வது என அனுஷ்காவின் செயல்பாடுகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை தகர்த்தெறிந்தார் விராட் கோலி. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் பெற்றார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அனுஷ்கா கேக் வெட்டி கொண்டாடி தன் கணவரான கோலியை பாராட்டியுள்ளார்.

இந்திய அணி வெற்றி பெற்ற அன்றே மைதானத்தில் அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி வெற்றியை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Add Comment