விஷால் : அனிஷாவும் நானும் காதலிக்கிறோம்… விரைவில் திருமணம்

ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் நடிகர் விஷால்தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என பல முக்கிய பொறுப்பில் உள்ளவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரின் திருமணம் குறித்து கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்வேன் என்றார். 

தவிர, நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்வேன் என கூறிவந்தார்.
இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விஷால் வெளியிட்டுள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி, இவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் தம்பதியின் மகள்.

திருமணம் பற்றி நடிகர் விஷால் கூறுகையில்,‘ எனக்கும், அனிஷா ரெட்டிக்கும், திருமண தகவல் உண்மை தான். இது காதல் திருமணம். நாளை தான் இருவரின் பெற்றோரும் சந்தித்து பேசுகின்றனர். அதற்கு பின் தான் நிச்சயதார்த்தம், திருமண தேதி முடிவு செய்யப்படும்.

அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.’ என்றார். 

Add Comment