விஜயின் சர்கார் படம் இத்தனை கோடிக்கு வியாபாரமா!தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் வியாபாரம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. பெரும் பொருட்செலவில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் வெற்றியால் சர்கார் படத்துக்கு எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடிக்கு வியாபாரம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இது ரஜினி படங்களை விட அதிக தொகை என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் ரஜினியை விட அதிக தொகைக்கு வாங்கப்படும் நடிகரின் படம் விஜய் படம் என்ற பெருமையைப் பெறும்.

Add Comment