“வர்மா” படத்தின் ட்ரைலர் வெளியீடு: வீடியோ

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி”.

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் “துருவ் விக்ரம்” நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு “வர்மா” என தலைப்பு வைத்துள்ளனர்.

பாலா இயக்கி வரும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் கடைசிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கபட்ட, இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இதோ உங்களுக்காக வீடியோ இணைப்பு…

Add Comment