வனிதாவின் மகளா இது ? அழகு கொள்ளை அழகு !

தற்காலத்தில் சீரியல் நடிகையாக நம்மால் பார்க்கப்படும் வனிதா 80களில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வளம் வந்தவர் . அது மட்டும் அல்ல தனது 13-வது வயதில் சினிமா துறைக்கு நடிக வந்தவர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிப்பு துறையில் பல்வேறு சுவாரசியமான படம் மற்றும் சிரியல்களில் நடித்து வருகிறார் .

1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாதை மாறினால்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதுமட்டும்மல்லாமல் சில கமல் தொங்கி தற்போதுள்ள விஜய் அஜித் வரை அணைத்து முன்னணி ஹீரோக்களின் படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

வயதானதும் சினிமாவில் வாய்ப்பு குறையவே பின்னர் தன்னை முழு நேர சீரியல் நடிகையாக மாற்றிக் கொண்டார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், இவர் மாதவி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.மேலும் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘முள்ளும் மலரும் ‘ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா 1986 ஆம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ணசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற ஒரு அழகான இவர்களுக்கு பிறந்தார். தற்போது 28 வயதாகும் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கன்னடாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Add Comment