மதுரை மாவட்டத்தில் கருவுற்ற சிறுமி காலில் விழுந்தும் கண்டுகொள்ளாத காதலன்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்துள்ள கண்மாய்ப்பட்டியை சார்ந்தவர் களச்சி கருப்பன். இவரது மகனின் பெயர் ராஜபிரபு. இவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே 17 வயதுடைய சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே தெருவை சார்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்த நிலையில்., கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில்., திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜபிரபு தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இந்நிலையில்., சில மாதங்கள் கழித்து தாம் கருவுற்றுருப்பதை கவனித்த சிறுமி., விசயத்தை ராஜபிரபுவிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். இதனை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

இந்த விசயத்தை ராஜபிரபுவின் தந்தையிடம் கூறியதை அடுத்து இவர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்., இதனையடுத்து சம்பவம் குறித்து சிறுமி மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment