புகார் கொடுக்க வந்த பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி கைது

தமிழகத்தில் அதிமுக எம்.பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சின்னத்திரை தொகுப்பாளினி ரொபினா சமீபத்தில் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.

அதில் நாங்கள் கணவன்-மனைவியை போன்றே வாழ்ந்தோம். அங்கிருந்த அக்கம்பக்கத்தினரும் எங்களை தம்பதிகள் என்றே எண்ணினர்.

அதன் பின் என்னிடம் நாசர் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டதாகவும், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகப் போவதால் அதை தடுத்து நிறுத்தும் படியும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காரைக்குடியில் நாசருக்கு நடைபெற்ற திருமணத்தை தடுத்து நிறுத்த ரொபினா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதைத் தொடர்ந்து நான் கொடுத்த புகார் மீது பொலிசார் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று ரெபினா ஆளுனரிடம் நாசர் என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி மனு அளிப்பதற்காக சென்னையில் உள்ள ராஜ்பவனிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அவர் எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் ஆளுநரை சந்திக்க முயன்றதால், பொலிசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து கிண்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்

Add Comment