பிக் பாஸ் நிகழ்ச்சி நான் ரவுடி..கல்ல தூக்கி அடிப்பேன்.! சவால் விட்ட போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Save Vijayalakshmi🙏🙏@Beyourselftruee

Real face of rowdy girls. Nee vaadi veliya ellarum kaari thupuvaanga. Viji you are rocking. These cheap girls should be handled very badly. Viji u did it. U r the winner of BB2.@ikamalhaasan @vijaytelevision

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கோலா மாவு நிரப்பபட்ட தொட்டி ஒன்று கொடுக்கப்படும், அதை மற்ற போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்து கோலமாவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் தொட்டியில் இருக்கும் கோலா மாவை எடுத்து வெளியில் கொட்டலாம்.

இதில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் சிலருக்கு ரத்தக் காயம் கூட ஏற்பட்டது. வழக்கம் போல இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சேர்ந்து விஜயலட்சுமியை டார்கெட் செய்தனர். நேற்றைய டாஸ்கிங் போது மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா ஜனனி, பாலாஜி ஆகியோரின் தொட்டிகளை கீழே தள்ளிவிட்டார். இதனால் ஜனனியும், ஐஸ்வர்யாவின் தொட்டியை கீழே தள்ளிவிட்டார்.

ஐஸ்வர்யா செய்த இந்த மோசமான செயலால் ஐஸ்வர்யாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல விஜயலகஷ்மி, யாஷிகாவின் தொட்டியில் இருந்து கோலமாவை எடுக்க முயற்சி செய்கையில் ஐஸ்வர்யாவும், யாஷிகாவை டாஸ்கில் ஜெயிக்க வைக்க போராடினார். பின்னர் ஒரு வழியாக டாஸ்க் முடிந்தது.

இந்த டாஸ்க் முடிந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டு பேசிய ஐஸ்வராயவும், யாஷிகாவும் ரௌடிகளை போல விஜயலக்ஷ்மி வெளியே வந்தால் அவரை கல்லால் தொரத்தி அடிப்போம் என்று பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் பேசியதை பார்க்கையில் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நீங்களே இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Add Comment