பிக்பாஸ் வீட்டில் திடீர் மரணம்..!

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் தற்போது ஹாட் டாபிக்காக இருந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் பிரம்மாண்டமான செட் அமைக்கபட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கான செட் ஒன்று மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் இரவும் பகலாக பல்வேறு கலைஞர்களும், தொழில்நுட்பு ஊழியர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 7) பிக் பாஸ் செட்டில் வேலை செய்து வந்த நபர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த குணசேகரன் என்ற 30 வயது மதிக்கதக்க நபர் பிக் பாஸ் 2 செட்டில் பல மாதங்களாக ஏசி மெக்கானிக்காக பணி புரிந்து வந்துள்ளார்.

நேற்று இரவு குணசேகரன் சாப்பிடுவதற்காக கை கழுவிவிட்டு தான் தங்கி இருந்து இரண்டாவது சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்த குணசேகரனை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு குணசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Add Comment