பாகுபலி படத்தின் பிரபாசுக்கு திருமணம்..! பெற்றோரின் அதிரடி முடிவு

பிரபாசும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், பிரபாசின் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும், மணப்பெண்ணை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

திரையில் இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்ததால் இருவருரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதற்கேற்றாற் போல், பாகுபலி படமும் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர்.

முன்னதாக பாகுபலி படம் ரிலீசுக்கு பிறகு, பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர்.

ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை கவனித்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதனால் தெலுங்கு பட உலகினரும், ரசிகர்களும் மணமகள் யார்? என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணமாக இருக்கிறார்கள்.

அனுஷ்காவைத் தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது.

பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் `சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

Add Comment