பரபரப்படையும் கோப்பாய் மாவீரர் துயிலும்!!

மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் , புலனாய்வாளர்கள், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment