படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா

படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க நயன்தாரா மறுத்த காரணம் தெரியவந்துள்ளது.

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஸ்வாசம் படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்று யுடியூப்பில் ஹிட் அடித்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமய்யா, யோகி பாபு, கோவை சரளா, விவேக், ஜகதி பாபு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் சிவா சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் அஜித், ஷாலினி ஆகியோருக்கு போட்டு காட்டியுள்ளார்.

அப்போது, படத்தை பார்க்க நயன்தாராவுக்கும் படத்தின் இயக்குனர் சிவா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், நயன்தாரா படத்தை பார்க்க செல்லவில்லை.

தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இயக்குனர் சிவாவிடம் ‘இந்த படத்தை பிரிவ்யூ தியேட்டரில் பார்ப்பதை விட, ரசிகர்களின் கைதட்டலுக்கு நடுவே தியேட்டரில் அவர்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறேன்” என நயன் கூறிவிட்டாராம்.

Add Comment