நடிகர் விஷால் திருமணம் குறித்து அம்பலமான தகவல்!

நடிகர் விஷால் திருமணம் குறித்து பல செய்திகள் வந்த நிலையில் அது தவறான தகவல் என்று அவர் மறுத்துள்ளார்.

நடிகரும், நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் திருமணம் செய்து கொள்ள போவதாக இரு தினங்களாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தனக்கும் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் நானும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று விஷால் தெரிவித்ததாகவும். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனக்கு திருமணம் என்று குறிப்பிட்டிருந்த விஷால் அது முடித்த பின் தான் திருமணம் செய்ய உள்ளேன் என்று கூறியதாக பல தகவல்கள் பரவி வந்தன.

இது குறித்து நடிகர் விஷால் தனது டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர் எப்படி என்னை பற்றி தவறான தகவல் பரப்ப படுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றும். அதை விரைவில் சந்தோஷத்தோடு அறிவிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Add Comment