நடிகர் சக்தி குடிபோதையில் காரை ஓட்டி விபத்து

சென்னை சூளைமேடு  பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கார் மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதியது. இதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு வேகமாக சென்ற காரை அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். காரை ஓட்டியது திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி என்றும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. சக்தியின் நண்பரும் காரில் இருந்துள்ளார்.
இதனையடுத்து சக்தி மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வேகமாக வாகனம் ஓட்டுதல் என 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Add Comment