தேடப்பட்ட மாணவி அரை நிர்வாணமாக கண்டெடுப்பு!

ரஷ்யாவில் காணாமல் போனதாக 8 நாட்கள் தேடப்பட்ட மாணவி அரைநிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Nizhneudinsk நகரத்தை சேர்ந்த 17 வயதான கினுல் தடாஷோவா என்ற மாணவி கடந்த 8 நாட்களுக்கு முன்னதாக, நண்பரை பார்த்துவிட்டு வருகிறேன் எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவருடைய தாய் எலெனா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில், மாணவியின் வகுப்பு நண்பர்கள் இகோர் மார்கோ (17) மற்றும் செர்ஜி (15) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால், இருவரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தினர்.

அதில், மகன் கொலை செய்ததை அறிந்த மார்கோவின் தாய் பொலிசாரிடம் தெரிவிக்காமல், மாணவியின் சடலத்தை வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் மறைத்து வைக்க உதவி செய்துள்ளார்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் மார்கோவின் தாயை நகரத்தை விட்டு வெளியேற கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையில் மார்கோவின் தாயும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தால் அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என பொலிஸார் கூறியுயுள்ளனர்.

Add Comment