பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா?

இன்று பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தீர்ப்பு உலகம் முழுக்க ஒரு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை சினிமா துறையை சேர்நத பிரபலங்கள் பலரும் வரவேற்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை திரிஷா, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அரசு அங்கீகரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக டுவிட்டரில், “அனைவருக்கும் சமஉரிமை கிடைத்துள்ளது; இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய உள்ளது.. ஜெய் ஹோ” என பதிவிட்டுள்ளார்.

Add Comment