தீயாக பரவும் காணொளி- நடிகர் சக்தியை பார்த்து திரையுலகமே அதிர்ந்த சம்பவம்

திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி, சென்னையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

சூளைமேடு இளங்கோவடிகள் வீதயில்; தனது காரில் வேகமாகச் சென்று, நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி நடிகர் சக்தி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரளவே, காரை பின்னோக்கி இயக்கியபடி சக்தி தப்ப முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் காரை விடாமல் சூழ்ந்து கொண்ட மக்கள், காருக்குள் இருப்பது நடிகர் சக்தி எனத் தெரிந்ததும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்துகையில் சக்தி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சக்தியையும், அவர் உடன் இருந்த நண்பரையும் கைது செய்த காவல்துறையினர் பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

Add Comment