திரையுலக பிரபலங்களில் பெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்த நடிகர்கள்!.. புகைப்படம் உள்ளே

திரையுலக பிரபலங்களில் பெரிய வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்தவர்கள் மற்றும் திருமணம் செய்துகொண்டவர்கள் யார் என்று பார்ப்போம்.

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோன்ஸ்

சமீபத்தில் பத்து வயது வித்தியாசத்தில் இணைந்திருக்கும் ஜோடி ஹிந்தி நடிகை பிரியாங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ். சர்வதேச ஊடகங்களில் இவர்களது காதல் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஜோடியில், பிரியங்கா சோப்ராவிற்கு 35, நிக் ஜோன்ஸிற்கு 25 வயது ஆகும்.

ரன்பீர் கபூர் – அலியா பட்

ஹிந்தி நடிகரும், ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூரும், இளம் நடிகையான அலியா பட்டும் தற்போது Date செய்ய துவங்கியிருக்கிறார்கள். இவர்களில் ரன்பீர் கபூருக்கு வயது 35, அலியா பட்டிற்கு வயது 25 ஆகும்.

ஷாகித் கபூர் – மீரா ராஜ்புத்

37 வயதான ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரும், 23 வயதேயான மீரா ராஜ்புத்தும் திருமண பந்தத்தில் இணைந்துவிட்டனர். இவர்கள் உறவில் இணைந்தபோது ஷாகித்திற்கு 34, மீராவிற்கு 20 வயது ஆகும். 14 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

அமீர்கான் – கிரண் ராவ்

ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமீர்கான், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களில் அமீர்கானுக்கு 53 வயது. கிரண் ராவிற்கு வயது 44 ஆகும்.

சயீப் அலிகான் – கரீனா கபூர்

ஏற்கனவே திருமணமாகி இருந்த ஹிந்தி நடிகர் சயிப் அலிகான், நடிகை கரீனா கபூருடன் உறவில் இருந்தார். ஷாகித் கபூருடனான உறவு முறிந்த பிறகு கரீனா கபூர், சயிப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 10 ஆகும். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஃபராகான் – ஷிரிஷ் குந்தர்

நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறிய ஃபராகான், தன்னை விட 8 வயது இளையவரான ஷிரிஷ் குந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஷிரிஷ் கான் திரைப்பட படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த ஜோடிக்கு செயற்கை கருத்தரித்தல் மூலமாக மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீதேவி – போனி கபூர்

ஸ்ரீதேவி – போனி கபூரும் நீண்ட கால உறவில் இருந்தனர். அதன் பின்னர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த போனி கபூர், இரண்டாவதாக ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 8 ஆகும்.

சஞ்சய் தத் – மான்யதா தத்

பல சர்ச்சைகளுக்கு உள்ளான ஹிந்தி நடிகர் சஞ்சய் தத். இவருக்கும், இவரது மனைவி மான்யதாவிற்கும் வயது வித்தியாசம் 20 ஆகும். சஞ்சய் தத் மூன்றாவதாக மான்யதாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். மேலும், முதல் மனைவி மூலமாக சஞ்சய் தத்திற்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா – ரித்தேஷ் தேஷ்முக்

தமிழில் சில படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா, ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். ரித்தேஷ், ஜெனிலியாவை விட 9 ஆண்டுகள் வயதில் மூத்தவர் ஆவார்.

இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி ஹிந்தி திரையுலகின் அழகான தம்பதி என்று புகழப்படுகிறார்கள்.

தர்மேந்திரா – ஹேமா மாலினி

தர்மேந்திரா – ஹேமா மாலினி ஜோடிக்கு 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் ஆகும். அமிதாப் பச்சனுக்கு இணையான நடிகராக திகழ்ந்த தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர் ஆவார். இவர்களது திருமணம் அன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ராஜேஷ் கண்ணா – டிம்பிள்

கடந்த 1973ஆம் ஆண்டு ‘பாபி’ திரைப்படம் வெளியனபோது ராஜேஷ் கண்ணா – டிம்பிள் ஜோடி திருமணம் செய்து கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த டிம்பிள், தனது 16வது வயதிலேயே ராஜேஷ் கண்ணாவை திருமணம் செய்துகொண்டார். ராஜேஷிற்கு அப்போது வயது 31 ஆகும்.

அங்கிதா கோன்வர் – மிலிந்த் சோமன்

நடிகர் மிலிந்த் சோமன் தன்னை விட 25 வயது இளையவரான அங்கிதா கோன்வரை டேட்டிங் செய்தார். இவர்களது உறவு திருமண பந்தத்தில் இணைந்தது பலரை விமர்சிக்க வைத்தது.

திலீப் குமார் – சாயிரா பானு

22 ஆண்டு வயது வித்தியாசத்தில் இருந்தாலும், சிறந்த ஜோடியாக திகழ்ந்தவர்கள் திலீப் குமார் – சாயிரா பானு.

Add Comment