தன்னை விட 30 வயது அதிகமான இவரை தான் திருமணம் செய்வேன்!

பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சல்மான் கான். பிரபல நடிகரான இவர் பல ஹிட் படங்களை கொடுத்ததோடு ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.

சில சர்ச்சைகளிலும் சிக்கியவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு வயது 54 ஆகிவிட்டது. மும்பையில் பாந்த்ராவில் உள்ள இவரின் வீட்டின் அருகே 24 வயதுள்ள குசும் என்ற இளம் பெண் சுற்றிதிரிந்துள்ளார்.

மேலும் அப்பெண் சுவர் ஏறி குதித்து நான் சல்மானை தான் திருமணம் செய்துகொள்வேன். அவரை சந்தித்து என் ஆசையை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

அவரின் பாதுகாவலர்கள் அப்பெண்ணை பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். விசாரிக்கையில் அவர் சல்மானின் தீவிர ரசிகை என்பது தெரியவந்தது. பெற்றோரிடம் சொல்லி அவருக்கு புத்திமதி சொல்லுமாறு அனுப்பிவிட்டார்களாம்.

Add Comment