‘தடம்’ திரைப்படத்தின் மிரலவைக்கும் trailer

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள தடம் திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “குற்றம் 23”. இத்திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” எனப் பெயரில், பெரும் பொருட்செலவில் அடுத்த படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், இத்திரைப்படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு இப்படம் U/A சான்றிதழ் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இசை மற்றும் வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Add Comment