ஜாக்கிரதை! பிரித்தானியாவில் மிகவும் மோசமான கிரிமினல்கள் இவர்கள் தான்!

பிரித்தானியாவில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைக்க வேண்டாம் எனவும், அவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய குற்ற நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டு இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த குற்றவாளிகள் எல்லாம் பொலிசாரிடம் இருந்து தப்பி வந்தவர்கள் எனவும் இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் online form என்ற லிங்கில் சென்று தகவலை தெரிவிக்கும் படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரி, அவர்கள் யார் என்பதே வெளியில் தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகவல் மட்டும் நீங்கள் கொடுத்தால் போது, மற்றவற்றை பொலிசார் பார்த்துகொள்வர். உங்களை நீதிமன்றத்திற்கு அழைக்கமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதை பொருள் கடத்துபவர்கள் எனவும், இவர்களை கண்டால் எந்த ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தேசிய குற்ற நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

online form-ஐ தவிர பொலிசாருக்கும் தொடர்பு கொண்டு கூறலாம் எனவும், அவர்களின் பெயர், Mark Quinn, Dominic McInally, Sarah Panitzke, Jonathon Kelly, Shane O’Brien, David John Walley, David Ungi, Shazad Ghafoor, Mehmet Salih, Costas Sampson, Timur Mehmet, Christakis Philippou, Ersin Mustafa, Ozgur Demir, Osman Aydeniz, Mark Liscott, Rezgar Zengana, Michael Paul Moogan, John Barton, Shashi Dhar Sahnan, Fatah Benlaredj, Christopher Guest More, Kevin Thomas Parle, Allan Foster, Derek McGraw Ferguson, Daniel Dugic, Daniel Bowes என குறிப்பிட்டுள்ளது.

Add Comment