சென்னையில் கள்ளக்காதலனுக்காக தன் 2 குழந்தைகளை கொன்ற அபிராமி வீடியோ வெளியீடு

சென்னை குன்றத்தூர் 3 ஆம் அறக்கட்டளை பகுதியில் வசித்து வந்த அபிராமி என்ற பெண் 2 மாத கள்ளக்காதலனுக்காக 8 வருட திருமண வாழ்கையில் பெற்ற 2 குழந்தையை விஷம் வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். அவரை போலிசார் நாகர்கோவிலில் வைத்து இன்று கைது செய்துள்ளனர்.

இரண்டு பிஞ்சு குழந்தைகளை கொலை செய்து விட்டு எந்த பதட்டமும் இல்லாம் ஹாயாக பைக்கில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தப்பித்து செல்ல தனது பைக்கை அபிராமி பார்க் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் இரக்கமே இல்லாமல் தான் கொலை செய்த தன் குழந்தைகளுடன் அபிராமி ஊர் பெருமைக்கு செல்பி வீடியோ எடுக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது.

அபிராமியின் கள்ளக்காதலன் பெயர் சுந்தரம் அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். கடையில் பிரியாணி வாங்கும் போது பலக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி அபிராமியின் கணவர் விஜய் க்கும் அபிராமிக்கும் சண்டை வந்துள்ளது. அபிராமியின் கணவர் வங்கியில் பணி புரிபவர், கள்ளக்காதலன் பிரியாணி கடை.

தனது உல்லாசத்திற்கு தடங்கலாக இருக்கும் குடும்பத்தை ஓட்டுமொத்தமாக தீர்த்த கட்ட முடிவு செய்தார் அபிராமி. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இதற்காக திட்டம் போட்டுள்ளார்.

பிடிபட்ட அபிராமி

ஒரு நாள் கணவர் இரவு வீட்டிற்கு வராமல் வங்கியில் தங்கியுள்ளார். குழந்தைகளை தீர்த்து கட்ட இதுதான் சந்தர்ப்பம் பின்னர் கணவர் போட்டு தள்ளுவோம் என நினைத்த அபிராமி, பிஞ்சு குழந்தைகளுக்கு டீ யில் விஷம் கலந்து குடிக்க கொடுத்துள்ளார். அம்மா நம்ல கொலை செய்ய விஷம் கொடுக்கின்றார்கள் என்பதை அறியாத பிஞ்சுகள் அதை வாங்கி குடித்துள்ளனர். எங்கு குழந்தைகள் உயிர் தப்பி விடப் போகின்றதோ என என்னி இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து கொன்றதாக பிடிப்பட்ட அபிராமி வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

காலையில் வீட்டிற்கு வந்த கணவர் விஜய் அபிராமியின் பைக் இல்லாதை கண்டுள்ளார். வீட்டிற்கு சென்றதும் குழந்தைகள் சடலமாக இருப்பதை கண்டு கதறியுள்ளார்.

தான் கொலை செய்த குழந்தைகளுடன் அபிராமி

மாமியார் வீட்டிற்கு போன் செய்து அபிராமி அங்கு வந்தாரா எனக் கேட்டுள்ளார் கணவர் அங்கு வரவில்லை என அவர்கள் கூறியதும் சந்தேகப்பட்ட விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவிக்கு சுந்தரம் என்பவருடன் பலக்கம் இருந்தது எனக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலிசார் சுந்தரத்தை கைது செய்து விசாரித்தனர்.

அபிராமிக்கு சுந்தரம் மூலம் போன் போட வைத்துள்ளனர் போலிசார். சுந்தர் போலிசில் மாட்டாதது போன்று சகஜமாக பேசி, அபிராமி நீ நாகர்கோவில் வா நாம ரெண்டு பேரும் எங்காவது தப்பித்து போயிடுவோம் எனக் கூறி அபிராமியை சுந்தரம் மூலம் போலிசார் நாகர்கோவில் வர வைத்துள்ளனர்.

அபிராமி நாகர் கோவில் வந்ததும் மறைந்திருந்த போலிசார் அபிராமியை கைது செய்துள்ளனர்.

Add Comment