சுப்ரமணியபுரம் நாயகி சுவாதிக்கு திருமணம் முடிந்தது

தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்த சுவாதி.

சமீபத்தில் சுவாதிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் படி தற்போது சுவாதி தன்னுடைய நீண்ட கால நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விகாஸுடன் சுவாதி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Add Comment