சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் புத பகவான் -புதன் பெயர்ச்சி பலன்கள்

சிறந்த அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலுக்கு அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த புதன் கிரகம் இம்மாதம் 2 தேதி ஞாயிற்று கிழமையன்று இரவு 9.16 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆனது. இந்த புதன் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு நான்காம் இடமான கடக ராசியிலிருந்து ஐந்தாம் இடமான சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைவதால் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். திருமணம் தடை புத்திர பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு அப்பிரச்னைகள் நீங்கும். தாராள தன வரவு இருக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு மூன்றாம் இடமான கடக ராசியிலிருந்து நான்காம் இடமான சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சி அடைந்திருப்பதால் தந்தை உடல்நலம் பாதிக்கக்கூடும். புதிய முயற்சிகளில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். உடலுக்கு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டேயிருக்கும் சூழல் உண்டாகும். வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும்.

மிதுனம்:
மிதுனத்திற்கு இரண்டாம் இடமாகிய கடக ராசியிலிருந்து மூன்றாம் ராசியாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் சகோதர வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். உடல்நலம் அதீத அலைச்சல்களால் குன்றும். கொடுக்கல், வாங்கல் சுமாராகவே இருக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்:
கடக ராசியிலிருந்து அந்த ராசிக்கு இரண்டாமிடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களின் பேச்சாற்றல் மூலம் செல்வதை ஈட்டுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும். பிறருடனான பணம் சம்பந்தமான விடயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலை சற்று பாதிப்படையும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு அதன் சொந்த ராசியிலேயே புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும். வழக்கு, சொத்து பங்கு பெறுதல் போன்றவற்றில் உங்களுக்கு சாதமான நிலை ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டு லாபம் அதிகம் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு பதினோராம் இடத்திலிருந்த புதன் பன்னிரண்டாம் இடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினர்களிடம் மதிப்பும், மரியாதையும் மிகும். பணவரவு தடங்கலின்றி வந்து சேரும். பிறருக்கு கடன், பிணைப்பத்திர கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.

துலாம்:
துலாம் ராசிக்கு பத்தாம் இடத்திலிருந்து பதினோராம் இடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநபர்களிடம் வாக்குவாதங்கள் சண்டைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

விருச்சகம்:
இந்த ராசிக்கு ஒன்பதாம் இடத்திலிருந்த புதன் பத்தாமிடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உஷ்ண சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

தனுசு:
தனுசு ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாமிடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் பெண்களுக்கு உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சற்று தாமதப்படுத்துவது நலம் பயக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவர்கள் கல்வி பயில்வதில் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மகரம்:
மகர ராசிக்கு ஏழாமிடத்திலிருந்த புதன் எட்டாமிடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் சகபணியாளர்களிடம் கடன் வாங்குதல், வீண் அரட்டை அடித்தல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். வீடு, நிலம் விற்பனை செய்வதில் சிறிது தடங்கல் உண்டாகும். பொருள்வரவு நன்றாக இருக்கும்.

கும்பம்:
இந்த ராசிக்கு ஆறாம் இடத்திலிருந்து எழமாமிடமாகிய சிம்மத்திற்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும். வீட்டு உபகரணங்கள், வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.

மீனம்:
மீன ராசிக்கு ஐந்தாமிடத்திலிருந்து ஆறாமிடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். நல்ல பொருள்வரவு இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வாகனப்பயணங்களின் போது எச்சரிக்கை அவசியம்.

Add Comment