கெளசல்யா இரண்டாவது திருமணம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் என்ன சொன்னார்?

சக்தி என்பவரை கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்த நிலையில் அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யா கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசைக்கலைஞர் சக்தி என்ற சத்தியநாராயணணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், சாதி அரசியல், பாலின சமத்துவமின்மை, இனவெறி போன்றவையால் தான் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை நடக்கிறது.

இனி எந்த விதமான சார்பற்ற தன்மையும் இன்றி இனி பயணிப்போம்.

கெளசல்யாவை நினைத்தால் ஆச்சரியமாகவும், பிரம்மிப்பாகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Add Comment