குழந்தைகள் முன் ஆபாச நடனம் ஆடிய பெண்….

உ.பி-யில் தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி….

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, ஊர்த்தலைவரின் ஏற்பாட்டின் பெயரில் பள்ளி வளாகத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் அரைகுறை ஆடை அணிந்த ஒரு பெண், உடலை குலுக்கி ஆபாச அங்க அசைவுகளுடன் துள்ளி, துள்ளி நடனம் ஆடியுள்ளார். பள்ளியில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் நடைபெற்ற இந்த நடனம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடன நிகழ்ச்சியை உயர் அதிகாரிகள், போலீசார் கண்டுகளிக்க, ஒருவர் ரூபாய் நோட்டுகளை அந்த நடனக் குழுவின் மீது இறைத்தபடி செல்லும் அந்த வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Add Comment