கும்பகோணம் பகுதியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை தீர்த்து கட்டிய 3 நண்பர்கள்!

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை அவரது நண்பர்கள் 3 பேர் கொலை செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சாகுல்ஹமீது வெளி நாட்டில் இருப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவணியாபுரத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது தாய், மற்றும் உறவினர்கள் மற்றும் திருவடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்தசீரை அவரது கல்லூரி நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை இஜாஜ் அகமது (வயது 20), ஜலாலுதீன் (19), முகமது சமீர் (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்தசீரை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் முன்தசீர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் விவகாரத்தில் முன்தசீரை, நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்

Add Comment