கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி கொன்றதாக கூறியவரிற்கு இன்று நடந்தது

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகிய கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவை யாழ் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் அவர்கள் சந்தேக நபரை இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் ஆயர்ப் படுத்தினர்.

அப்போது  பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேக நபர் ஏற்றுக் கொண்டார்


இதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவுட்டுள்ளது

Add Comment