ஓவியா மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்தால் அவங்களா ஆயிடுவீங்களா?

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான ப்ரொமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து தமிழில் பேசச்சொல்லி ஐஸ்வர்யாவிற்கு ரித்விகா, ஜனனி உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

அதை ஐஸ்வர்யா தனக்கே உரிய பாணியில் மறுக்கிறார். இதனால் வீட்டிலிருப்பவர்கள் ஐஸ்வர்யாவின் ஹேர்ஸ்டலையும் ஓவியாவின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பேசி விமர்சிக்கின்றனர். இதைக்கேட்டு ஐஸ்வர்யா தனியாக படுத்துக் கொண்டு அழுவதுபோல் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், போட்டிகளும், சண்டைகளும் அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த வார இறுதியில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

 

Add Comment