ஓவியா உருக்கம்..!எந்த மாற்றமும் இல்லை…! நான் தகுதியானவளா தெரியவில்லை..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன் பின்னர் தமிழில் “முதுக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு ” போன்ற பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் பல படங்களில் நடித்து கிடைக்காத பெரும் புகழும் இவருக்கு கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்து. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தனது வெகுளித்தனமான குணத்தினால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.ஆனால், ஆரவ்வுடனான காதல் விவகாரத்தால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினார் ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார் ஓவியா. கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் ஓவியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த பேட்டியில் நடிகை ஓவியா பேசுகையில், மக்களின் இந்த தூய்மையான அன்பிற்கு நான் தகுதியானவளா என்பது தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் என்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்தது போல எனக்கு தோன்றவில்லை. ஆனால், மக்களின் அன்பு மட்டும் நான் நினைத்து பார்க்காத அளவிற்கு உள்ளது என்று பேசியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா சிம்புவின் இசையில் “மரண மட்டை” என்ற பாடலை பாடி இருந்தார். மேலும், களவாணி 2, முனி 4 போன்ற படங்களிலும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

Add Comment