ஐஸ்வர்யாவுக்கு எதிராக கிளம்பிய ஆர்த்தி :தமிழ் பெண்களுக்கு ஓட்டு போடுங்க

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி.

பிக் பாஸ் 2 வீட்டில் தமிழ் பெண்களான ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோரும் ஐஸ்வர்யா தத்தாவும் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவுக்கு தான் டைட்டிலை கொடுத்து அழகு பார்ப்பார் பிக் பாஸ் என்று நம்பப்படுகிறது.

பார்வையாளர்களின் ஓட்டுகளை குப்பையில் போட்டுவிட்டு ஐஸ்வர்யாவை காப்பாற்றியவருக்கு டைட்டிலை கொடுக்கத் தெரியாதா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா ஐஸ்வர்யாவுக்கு எதிராக துணிச்சலாக பேசி வருகிறார் ஆர்த்தி. பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக சென்ற போது கூட ஐஸ்வர்யாவை நேரில் கலாய்த்தார். பார்வையாளர்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். ஐஸ்வர்யா ஆதரவாளர்கள் மீதும் கோப்பட்டுள்ளார் ஆர்த்தி.

தமிழ் பெண்கள் நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக் கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் என்று ஆர்த்தி தற்போடு ட்வீட்டியுள்ளார்.

விஜி ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ, ரித்விகா மற்றும் விஜி தெலுங்குகாரர்கள். அவர்களை தமிழர்கள் என்று கூற வேண்டாம். யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டாம். தகுதி உள்ளவர்கள் வெற்றி பெறட்டும். தமிழ் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம் என்கிறார்.

சென்றாயன் 1. மக்கள் விருது- மும்தாஜ் 2. அப்பாவி விருது – சென்றாயன் 3. பிக் பாஸ் 2 டைட்டில்- விஜி அல்லது ரித்விகா அல்லது ஜனனி 4. டுபாக்கூர் விருது – ஐஸ்வர்யா தத்தா இப்படி ஒரு விருது பட்டியலை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

 

Add Comment