உங்க ராசிக்கு உரிய அதிர்ஷ்ட நிறங்கள் என்ன தெரியுமா? இத படிங்க!

நாம் எதிர்பார்த்திருந்த 2019 ஆம் புது வருடம் நன்றாக பிறந்து விட்டது. இந்த வருடத்திலும் சில ஏற்றங்கள் இறக்கங்கள் இருக்கத் தான் போகிறது. உலகம் பல பேரழிவுகளையும் சில சாதகமான முன்னேற்றங்களையும் எதிர்கொள்ளும்.

நமது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை இந்த வருடம் பல கலப்புகளை கொண்டு இருக்கும். உங்களுடைய ராசியை கொண்டு உங்களுக்குரிய அதிர்ஷ்டமான நிறத்தை பயன்படுத்தி சாதகமான அணுகூலன்களை பெறலாம். சரி வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் நிறங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மேஷம்

முதல் ராசியான மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் இயற்கையாகவே போட்டி மனப்பான்மை மற்றும் ஆற்றலைக் கொண்டு காணப்படுபவர்கள். நீங்கள் இயல்பாகவே தனிப்பட்ட ஆக்கப்பூர்வமான நபர்கள் நீங்கள். நீங்கள் பொறுமையற்றவராக உணர்வு மிக்கவராக காணப்படுவீர்கள். நீங்கள் சாகசத்தையும், சவால்களையும் விரும்புவீர்கள். உங்களுடைய சுயமரியாதையால் எங்கு போனாலும் மதிக்க படுவீர்கள். இந்த வருடம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான வருடமாக அமையும். உங்களுக்குரிய அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு. சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ரிஷபம்

உங்களுடைய ராசி வெள்ளியாலும் சந்திரனாலும் நல்ல வலிமையை பெறுகிறது. நீங்கள் பிராக்டிகல் ஆன நபராகவும் நிலையாகவும் இருப்பீர்கள். உங்களுடைய ஆசைகளையும் இலக்குகளையும் உறுதியான கடின உழைப்பை கொண்டு அடைந்து காட்டுவீர்கள். வெள்ளை மற்றும் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்களாகும். இந்த அதிர்ஷ்டமான நிறங்கள் உங்களுக்கு கூடுதல் நன்மைகளையும் வெற்றியையும் பெற்றுத் தரும்.

மிதுனம்

உங்களுடைய ராசி ராதன் புதன் ஆவார். பல காரியங்களில் வல்லமை படைத்த நீங்கள் பெரிய சிந்தனையாளரும் கூட. நீங்கள் சிறந்த கவிஞனாகவும் எழுத்தாளராகவும் இருப்பீர்கள். உங்கள் பல்வகை திறமையால் உலகை ஆச்சர்யப்படுத்துவீர்கள். அதே நேரத்தில் நீங்கள் உற்சாகமான நபராகவும் பொறுப்பற்றவராகவும் முத்திரை குத்தப்படுகிறீர்கள். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் அமைதியற்றவராக தவிப்பீர்கள். பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க வல்லது.

கடகம்

நீர் தான் உங்கள் ராசியின் அடையாளமாக இருக்கும். உணர்ச்சி மிக்கவர் நீங்கள். இதனால் என்னவோ நீங்கள் எளிதாக துன்புறுத்தப்படுவீர்கள். தியான திறன்களை கொண்டு இருப்பீர்கள்.. உங்கள் மென்மையான இதயம் மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் பார்த்து கொள்வீர்கள். சமுதாயத்தை விரும்புதல், நீரில் பயணம் மேற்கொள்வது உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் சில்வர் நிறம். இந்த நிற ஆடைகளை அணிந்து இந்த ஆண்டு அணுகூலன்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள்.

சிம்மம்

தைரியத்திற்கு பேர் போன சிம்ம ராசி அன்பர்களே
நீங்கள் உறுதியான தைரியமான நபர்கள். நீங்கள் பிறந்ததே ஆட்சி பீடத்தில் அமரவே. உங்களுடைய அதிகாரம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை வரவேற்கும். உங்களுடைய வெளிப்படையான மனசு மற்றும் தனிப்பட்ட தன்மை மற்றவர்களை உங்களிடம் கவர்ந்திழுக்கும். நீங்கள் விரைவாக கோபப்பட்டாலும் சரி என்று நினைக்கும் போது மன்னிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு, ஆரஞ்சு, தங்க நிறம், மஞ்சள் மற்றும் க்ரீம்.

கன்னி

நீங்கள் புதனால் ஆளப்படும் ராசிக்காரர்கள். மக்களை தொடர்பு கொள்வதில் சிறந்தவர்கள் நீங்கள். நீங்கள் அனைத்து தொழில்களையும் வெற்றிகரமாக கையாள்வீர்கள். உங்களுடைய உதவும் மனம் உங்களுக்கு நிறைய நண்பர்களையும் நலன் விரும்பிகளையும் பெற்றுத் தரும். நீங்கள் கவர்ச்சிகரமானவராகவும், விமர்சனாராகவும் மற்றும் புத்திசாலி நபராகவும் திகழ்வீர்கள். ஆரஞ்சு, பச்சை, வெள்ளை, மஞ்சள், பழுப்பு போன்றவை அதிர்ஷ்டமான நிறமாகும்.

துலாம்

நீங்கள் ஒரு நல்ல சிந்தனையாளராகவும் நியாயமானவராகவும் இருப்பீர்கள். சுக்ரனால் ஆளப்படும் நீங்கள் மிகவும் நேசமானவராக இருப்பீர்கள். நேர்மையாக இருக்கும் நீங்கள் சில சமயங்களில் சோம்பேறியாகவும் இருப்பீர்கள். நீங்கள் உங்களை வெளிப்படையான நபராக நினைத்தாலும் இயல்பாகவே நீங்கள் இரகசியமான நபர்கள். ஜேட் பச்சை மற்றும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாகும்.

விருச்சிகம்

செவ்வாயை ராசிநாதனாக கொண்ட நீங்கள் நீரை அடையாளமாக கொண்டுள்ளீர்கள். விடாமுயற்சி மற்றும் வலுவான உறுதிப்பாடு கொண்டு காணப்படுவீர்கள். உங்களை கஷ்டப்படுத்தியவரை பழிவாங்கும் உணர்வு கொண்டு செயல்படுவீர்கள். உங்களுடைய சந்திரன் கிரக பலன் குறையும் போது அடிக்கடி சுய நம்பிக்கை இழந்து மன பாதிப்பு அடைவீர்கள். உங்கள் உணர்வுகளை கஷ்டப்படுத்த வது கஷ்டமாக இருக்கும். உணர்ச்சிகரமான, கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டு காணப்படுவீர்கள். ஊதா மற்றும் சிவப்பு உங்களுடைய அதிர்ஷ்டமான நிறமாகும்.

தனுசு

வியாழன் உங்கள் கிரகமாகும். உங்கள் நோக்கங்களில் தூய்மையானவராகவும் மிகவும் ஆர்வமாகவும் இருப்பீர்கள். வாழ்வில் பெரிய இலக்குகளை அடைய ஆர்வத்துடன் இருப்பீர்கள். முகத்திற்கு நேரே பேசுபவராகவும் உண்மையுள்ளவராகவும் காணப்படுவீர்கள். உங்களுடைய பேச்சு அனைவராலும் விரும்பப்படும். முன் கோபம் தான் உங்களுடைய ஒரு பெரிய குறை. இயற்கையிலேயே நேர்மையான உறுதியான மனிதர் நீங்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான நிறங்கள் வெளிரிய நீல நிறம், க்ரீம், வொயிட் மற்றும் ஆரஞ்சு.

மகரம்

சனி ஆதிக்கம் பெற்ற ராசிக்காரர்கள் நீங்கள். மெதுவாக செயல்படக்கூடிய யவர்கள் நீங்கள். சரியான வாய்ப்பை நோக்கி காத்திருந்து அவசரம் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுடைய நிதானமும் அமைதியும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய கணக்கு போடும் தன்மை மற்றும் நம்பிக்கை தொழிலில் வெற்றி கொடுக்கும். கருப்பு மற்றும் இண்டிகோ உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாகும்.

கும்பம்

நீங்கள் இயல்பாகவே கீழ்ப்படிந்த நபராக இருப்பீர்கள். சண்டை மற்றும் வாக்கு வாதங்களில் ஈடுபட விரும்பமாட்டீர்கள். தொண்டு நிறுவனங்களில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்மறையான, விமர்சனம் செய்யும் நபராகவும் சந்தேககிக்கும் நபராகவும் இருப்பீர்கள். உங்கள் அறிவியல் கண்ணோட்டமும், ஆன்மீக நம்பிக்கையும் கடவுளை நோக்கி பயணம் மேற்கொள்ள உதவும். உங்களுடைய அதிர்ஷ்டமான நிறங்கள் எலக்ட்ரிக் ப்ளூ, அல்ட்ரா மெரைன் ப்ளூ மற்றும் பழுப்பு நிறம்.

மீனம்

வியாழனை கிரகமாக கொண்ட மீன ராசி அன்பர்களே. உங்களுக்கு சந்திரன் பலம் மிகவும் வலுவாக உள்ளது. இயற்கையாகவே தியானத்தையும் மதத்தையும் ஒரு சேர கொண்டு போவீர்கள். நல்ல பார்வையாளராகவும், உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பீர்கள். உணர்ச்சி மிகுந்தவராக இருப்பீர்கள். மற்றவர்களால் நீங்கள் எளிதில் தாக்கப்பட்டாலும் மன்னிப்பு குணமும் உங்களுக்கு தாராளமாக இருக்கும். உங்களுடைய தொண்டு இயல்பு மற்றும் அக்கறை மற்றவர்களுக்கு பயனளிக்கும். உங்களுடைய அதிர்ஷ்டமான நிறங்கள் அக்வா, கடல்பாசி பச்சை இந்த அதிர்ஷ்ட நிறங்கள் உங்களுக்கு வெற்றியை தேடித் தரும்.-Source: boldsky

Add Comment