உங்களுக்கு தெரியுமா கூகுள் தகவல் மட்டுமல்ல… கேட்டால் பணமும் கொடுக்கும் !

தேடுதல் பொறிகளில் நம்பர் ஒன் இடத்தை கூகுள் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இதுவரை மின்னஞ்சல், யு டியூப், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், கூகுள் மேப், கூகுள் புகைப்படங்கள் என பற்பல இணைய சேவைகளை வழங்கி கோலோச்சி வருகிறது.

 

 

இதுவரையில் உலகின் எந்த மூலையில் உள்ள தகவல்களையும் திரட்டி தந்து கொண்டிருந்த கூகுள், தற்போது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பண மதிப்பிழப்பு ஏற்பட்ட பின் டிஜிட்டல் பேமண்ட் பலரிடையே பிரபலமானது. அது தற்போது வரவேற்பை பெற்று வரும் நிலையில், பண பரிவார்த்தனைகள் கணிசமான அளவில் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறியுள்ளது.

இதையடுத்து பேடிஎம், போன் பே, பே பால், வாட்ஸ் ஆப் போன்ற நிறுவனங்கள் டிஜிட்டல் பேமன்ட் செயலிகளை அறிமுகப்படுத்தி நிதி சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், இணைய உலகத்தின் ஜாம்பவானான கூகுள் தற்போது பேமன்ட் துறையிலும் தனது தடத்தை பதிக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் கூகுள் டெஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த செயலியை கூகுள் பே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சில வங்கிகளுடன் இணைந்து உடனடி கடன்களையும், மற்ற சில நிதி சேவைகளையும் வழங்கவுள்ளது.

கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும், சில ஆவணங்களை சமர்பித்து, அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த செயலில் 2,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், 15 ஆயிரம் சில்லறை வர்த்தக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

கூகுளின் இந்த செயலியைத் தற்போது 22 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கடும் போட்டியுள்ள இந்த சந்தையில் கூகுள் சிறந்த இடத்தைப் பிடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Add Comment