உங்களுக்கு தெரியுமா உலகிலேயே பெண் விமானிகள் அதிகமுள்ள நாடு இந்தியா!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகமுள்ள நாடு இந்தியா என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விமான போக்குவரத்து வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று அதிலும் குறிப்பாக உள்நாட்டு விமான போக்குவரத்து தான் அதிகம். இதில் பெண் விமானிகளின் பங்கு அதிகம் உள்ளது.

உலகிலேயே பெண் விமானிகள் அதிகம் உள்ள நாடு இந்தியா தான், 12 சதவீதத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர்.

போயிங் நிறுவனம் கருத்து கணிப்பின்படி அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 7 லட்சத்து 90 ஆயிரம் விமானிகள் தேவைப்படுகின்றனர். இந்த வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இந்தியாவின் பங்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

விமான பணியை பெண்கள் அதிகம் விரும்ப காரணம் பாலின பாகுபாடு பாராமல் ஊதியத் தொகை தரப்படுவதால், பணி மூப்பு, பயிற்சி நேரம் இதெல்லாம் இப்பணியை விரும்புவதற்கு பெண்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம்.

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் விமானத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருப்பது ஆச்சரியமான வளர்ச்சி என்றே கூறலாம்.

Add Comment