உங்களுக்கு தெரியுமா ஆயுள் பெருக எந்த ராசிக்காரர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

ஒருவரது ராசி குணநலன்கள், அமையும் வாழ்க்கைத் துணை மற்றும் எதிர்காலம் போன்றவற்றை கணிக்க உதவுவதோடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தைக் கணிக்கவும் உதவும்.

மேஷம்
 • இந்த ராசிக்காரர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். மேலும் இவர்கள் தங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள கிரேப் ஃபுரூட் மற்றும் க்ரீன் டீ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
 • மதுவைத் தவிர்த்து, அன்றாட உடற்பயிற்சியில் ஈடுபட்டு, க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

ரிஷபம்
 • இந்த ராசிக்காரர்கள், ஆப்பிள், மசாலா பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும்.
 • மேலும் இந்த ராசிக்காரர்கள் காலையில் பழங்கள், தயிர், இட்லி போன்றவற்றை உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்
 • இவர்கள் டீ, காபியைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு வருவது நல்லது. முக்கியமாக காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
 • மேலும் இந்த ராசிக்காரர்கள் மது மற்றும் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
கடகம்
 • வைட்டமின் குறைபாடுகளால் அவஸ்தைப்படுவதால், இந்த ராசிக்காரர்கள் ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். பிரட் இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல.
 • இந்த ராசிக்காரர்கள் ஃபாஸ்ட் புட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
 • இவர்களுக்கு இயற்கையாகவே மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும். எனவே இவர்கள் தினமும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும். மேலும் இவர்கள் நட்ஸ் மற்றும் நீரை அதிகம் உட்கொள்வது நல்லது.
கன்னி
 • கன்னி ராசிக்காரர்கள் எதையும் வேகமாக அடைய நினைப்பார்கள். இவர்கள் தினமும் நடைப்பயிற்சி மற்றும் அளவான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
விருச்சிகம்
 • இந்த ராசிக்காரர்கள் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் மற்றும் மற்ற வேளைகளில் சாப்பிடும் போது கீரைகள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தனுசு
 • இவர்கள் காய்கறிகள், சாலட், பூண்டு மற்றும் வைட்டமின் சி உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இந்த ராசிக்காரர்கள் உடற்பயிற்சியை அதிகம் செய்வதோடு, இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் வேகமாக தூங்கவும் செல்ல வேண்டும்.
மகரம்
 • இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியமான எடையுடன் இருக்க காய்கறி சூப், சூரை மீன் மற்றும் நற்பதமான காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இத்தகையவர்கள் எப்போதாவது சிறிது இனிப்புக்களை சாப்பிடலாம். ஆனால் பாஸ்தா, சாஸ் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
கும்பம்
 • கும்ப ராசிக்காரர்களுக்கு டயட் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இவர்கள் குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இவர்களுக்கு எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரியாது.
மீனம்
 • இந்த ராசிக்காரர்கள் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொண்டு உடலை சுத்தம் செய்யும் சிகிச்சைகளை அடிக்கடி முயற்சிக்க வேண்டும்.

Add Comment