இவ்வளவு ரசிகர்களா சாய் பல்லவிக்கு?

தமிழில் சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை கண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம், மலையாளம் மட்டும் அல்லாமல் எல்லா மொழி மக்களையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் பிசியாக இருக்கிறார் சாய் பல்லவி.

தமிழில் சூர்யா, தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயல்பான அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி தன் மேல் அன்பு வைத்து தன்னை இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கொண்டு வந்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Add Comment