இலங்கையில் வெலிகந்த பிரதேசத்தில் திடீரெனப் பெய்த கறுப்பு மழை….!!

வெலிகந்த பிரதேசத்தில் நேற்றைய தினம் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கிராமங்கள் சிலவற்றில் உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கறுப்பு மழை பெய்துள்ளது.

நேற்று மாலை 3.00 – 5.00 மணிக்கு இடையில் இந்த கறுப்பு மழை பெய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.பிரதேச மக்களினால் நிரப்பப்பட்ட பாத்திரங்களில், இந்த கறுப்பு மழை நிரம்பியுள்ளது.

அத்துடன் நேற்றுக் காலை முதல் வெலிகந்த பிரதேசத்தில் மழை பெய்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Add Comment