அபிராமியின் கணவரை ஆறுதல்படுத்திய ரஜினிகாந்த்!

குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வசித்து வரும் விஜய்- அபிராமி தம்பதியினருக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த விஜய், கூடுதல் பணி காரணமாக வங்கியிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில் தனது தவறான நடத்தைக்கு இடையூறாக இருந்த குழந்தைகள் இருவரையும் தாய் அபிராமி கடந்த சனிக்கிழமையன்று பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 2 குழந்தைகளும் ரஜினிகாந்த் போல சைகை செய்யும் புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.

 

தனது குழந்தைகளை இழந்து வாடும் அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது விஜய் கதறி அழுதுள்ளார். அப்போது மீண்டு வாருங்கள் விஜய். ஆண்டவன் துணை இருப்பான் வேறென்ன சொல்ல என்று ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார்.

அபிராமியின் கணவர் விஜய் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும குறிப்பிடத்தக்கது.

Add Comment